கோலாலம்பூர், செப் 24 – பிரதமர் Ismail Yaakob தமது மலேசிய குடும்ப உணர்வு கோட்பாடு செய்தியை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்கிறார்.
நாளை ஐ.நா பொதுப் பேரவையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது
மலேசிய குடும்ப உணர்வு செய்தியை அவர் வலியுறுத்துவார் என வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. முன்கூட்டியே காணொளியில் பதிவு செய்யப்பட்ட பிரதமரின் உரை ஐ.நா பொதுப் பேரவையில் இடம்பெறும்.
உலகம் ஒரு குடும்பம். மலேசிய குடும்பம் எப்படி உலக குடும்பத்தோடு இணைந்து கோவிட் தொற்றை முடிவுக்கு கொண்டு வருவது என்பதை ஐ.நா பொதுப் பேரவையில் பிரதமர் விவரிப்பார். மேலும் பாலஸ்தீனர்கள் மீதான மலேசியாவின் கடப்பாட்டையும் பிரதமர் மறுஉறுதிப்படுத்துவார் என்றும் வெளியுறவு அமைச்சு கூறியது.
Source : Vanakkam Malaysia