மலேசியக் குடும்பம் அறக்கட்டளை
மலேசியக் குடும்பம் அறக்கட்டளையானது அனைத்து மலேசிய குடும்ப உறுப்பினர்களுக்கானது. அதிலும், குறிப்பாக தாயையோ தந்தையையோ தாய் தந்தை இருவரையோ கோரணி நச்சில் பரவல் காரணமாய் இழந்த குழந்தைகளுக்கு ஆறுதலாய் அமைகிறது.
மலேசியக் குடும்பத்தின் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 18 வயதை அடையும் வரை கல்வி உட்பட பல தேவைகளுக்காக ஆதரவையும் உதவியையும் அவர்களுக்கு வழங்கவே மலேசியக் குடும்பம் அறக்கட்டளை தொடக்கப்படுகிறது.
மலேசியக் குடும்பத்தின் கூறுகளாகிய உள்ளடக்கம், ஒற்றுமை, மனநிறைவு ஆகியவையின் வரையறை படி மலேசியக் குடும்பம் அறக்கட்டளை பிற குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.