#மலேசியக் குடும்பம் அணி
மலேசியக் குடும்பம் அணியானது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாக்கோப் அவர்களால் 8 அக்டோபர் 2021 அன்று தொடங்கப்பட்டது. இவ்வணியானது பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சின் (KPWKM) கீழ் வரும் சமூக நலத்துறை (JKM) மூலம் வழிநடத்தப்படுகிறது.
இவ்வணியானது பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்கள் / அமைப்புகள் தனியார் நிறுவனங்கள் அரசு சாரா அமைப்புகள் ஆகியவையின் கூட்டாகும். நாடு முழுவதும் மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவதே இவ்வணியின் நோக்கமாகும்.
இன்றுவரை, அணியில் 10,000 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அனைவரும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராக உள்ளனர்.
மேலும், இன்னும் பல அமைச்சுகளும், நிறுவனங்களும் அமைப்புகளும் தன்னார்வலர்களும் முன் வந்து பதிந்து இவ்வணியில் இணைந்திட வேண்டும்.